Skip to main content

பெட்ரோல் டீசல் விலைஉயர்வு!!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
petrol

 

சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு காரணமாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர வாய்ப்புள்ள நிலையில், இன்றும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது.

 

 சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ.85.61 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து 78.90 ஆகவும் விற்பனையாகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

குறையாத தக்காளி விலை; ஆலோசனைக்குப் பின் முடிவெடுத்த அமைச்சர் பெரியகருப்பன்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 'Sales of tomatoes in 500 ration shops'- Minister Periyakaruppan interview

 

தமிழகத்தில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மேலும் 200 கடைகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் அத்துறையைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், ''தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும் 35 ஆயிரம் கடைகளில் விற்கலாம் என்றால் கூட தக்காளி கிடைப்பது என்பது சிக்கலாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு நியாயவிலைக் கடைகளில் சராசரியாக 50 கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மொத்தமாகப் பண்ணைப் பசுமை கடைகளின் மூலமாக அம்மா உணவகம் போன்ற மற்ற இடங்களில் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சராசரி விற்பனையை விட நான்கு மடங்கு விற்பனை இப்பொழுது கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இயற்கையினுடைய கோளாறுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இது எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்து செய்யக்கூடிய வேலை. முதலில் விவசாயப் பெருமக்கள் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், கனிகள் ஆகியவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் பயிர் செய்தால் நியாயமான விலை கிடைக்கும், இதுபோன்ற தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படும் என்பதை எல்லாம் வேளாண்துறையின் மூலமாக அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டுறவுத்துறையைப் பொறுத்தவரை விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியில் அவர்களுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து வேளாண்துறையோடு கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை கலந்து பேசி இருக்கிறோம். உயர்மட்ட அளவில் பேசி முடித்தவுடன் அடுத்த ஆண்டு பருவங்களில் உற்பத்தி குறைகின்ற நேரங்களில் நாம் எப்படி அந்த உற்பத்தியைப் பெருக்குவது என்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். எப்படிக் கடந்து வர வேண்டும் என்பதற்கான திட்டங்கள் எதிர்காலத்தில் தயாராக இருக்கும்'' என்றார்.

 

 

 

Next Story

காய்கறிகள் விலை உயர்வு எதிரொலி; கீரைகள் மீது ஆர்வம் காட்டும் மக்கள்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

 Reversal of rise in prices of vegetables; People who are interested in vegetables

 

கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தமிழகம் முழுக்க தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

 

ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டன. இதைப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இன்று முதல் கோபி பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

இதைப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனை ஆனது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10 அதிகரித்து ரூ.160க்கு விற்பனை ஆனது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

nn

 

முக்கியமான காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரை வகைகளில் திரும்பி உள்ளது. முன்பு சாப்பாட்டுக்கு இரண்டு வகையான காய்கறிகள் வாங்கிய மக்கள் தற்போது சாப்பாட்டுக்கு கீரைகளை வாங்கி வருகின்றனர். கீரை விலையும் மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 10க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8க்கு விற்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

இதேபோல் எலுமிச்சம்பழம் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம்பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ. 4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.