Published on 12/10/2018 | Edited on 12/10/2018

நக்கீரன் ஆசிரியர் கைது விவகாரத்தில், கவர்னர் மாளிகையின் புகாரை சரிவர கையாளவில்லை என சென்னை காவல்துறை அதிகாரிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறது ராஜ்பவன்.
இந்த நிலையில் , சென்னை கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் சிலர் மாற்றப்பட வேண்டும் என கோட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் மாற்றப்படலாம். இந்த நிலையில், சென்னையின் புதிய கமிஷ்னராக திரிபாதி, ஆசிஸ்பாங்க்ரே ஆகியோரை அரசு பரிசீலிக்கிறது. அநேகமாக, திரிபாதி நியமிக்கப்படலாம் என ஐ.பி.எஸ். வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.