Published on 10/01/2023 | Edited on 10/01/2023
![governor rn ravi poster goes viral](http://image.nakkheeran.in/cdn/farfuture/YSYv4BUUll1Y5bYKTjRPCvJPqsy2Kdz48sVemS5tBf4/1673341547/sites/default/files/inline-images/993-prakash_11.jpg)
தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்டது போல சட்டமன்றத்தில் எதிரொலித்தது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது முழக்கங்கள் எழுந்தது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் பல வார்த்தைகளைத் தவிர்த்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டமன்றத்திலிருந்து எழுந்து சென்றார் ஆளுநர். இதனால் பல தரப்பிலும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு பாஜக சார்பில் ‘ஆளுநரின் ஆளுமையே’ என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஆளுநர் பாஜக என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாகக் கூறுகின்றனர்.