Skip to main content

மனித உரிமைகளை மீறும் அரசு

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
மனித உரிமைகளை மீறும் அரசு

தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான வேம்பார் கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டிய ராமநாதபுரத்தின் எல்லைப் பகுதியிலிருக்கிறது. சுமார் மூன்றாயிரம் மக்கள் ஜனத்தொகையைக் கொண்ட வேம்பார் பஞ் ஊராட்சி, மீன் பிடித் தொழிலையும், கோழிப் பண்ணையையும் தொழில் நிமித்தமாக உள்ளடக்கியுள்ளது.

இங்கே சேருகிற குப்பைகள், கவுச்சி வீசுகிற மீன்கழிவுகளையும் கோழிக் களிசல்களையும் துப்புறவுபடுத்தி அள்ளிச் செல்ல பஞ்சாயத்து நிர்வாகத்தால் 6 தற்காலிகப் பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் காலை 6 மணிக்குத் துப்பறவுப்பணியில் ஈடுபடும் இவர்கள் கிராமக் கழிசல்கள் குப்பைகளை எல்லாம் மதியம் மூன்று மணிக்குள் அள்ளிச் சென்று தொலையிலிருக்கும் பஞ் குப்பைக் கிடங்கிற்குக் கொண்டு செல்வார்கள்.

காலச் சீதோஷ்ணம் எப்படிப்பட்ட நிலைக்குச் சென்றாலும், கிராமத்தின் குப்பை அள்ளுகிற வேலை மட்டும் தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்திருக்கிறது. வீச்சத்தையும், கழிவுப் பொருட்களின் மோசமான தரத்தையும் தாங்கிக் கொண்டும், சகித்துக் கொண்டு அள்ளும் இவர்களை எறெடுத்துப் பார்க்க நாதியில்லை. குப்பைகளை அள்ளுகிற நிலை தான், இப்படி என்றால், அவர்களும் மனித இனம் தானே என்று அறவே சிந்திக்காத பஞ் நிர்வாகம் சட்ட முறைப்படியும் தர்மப்படியும், அவர்களின் உடல் நிலை பாதுகாப்பக் கருதியும், கால் மற்றும் கைகளுக்கான பாதுகாப்பு உறைகளை இந்தக்கணம் வரை வழங்க வில்லை நிர்வாகம். 



ஆனாலும் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளையும், வேதனையையும் தாங்கிக் கொண்டே இந்தப் பணியை மேற்கொள்ளும் இவர்களின் மாதக் கட்டுத் தொகையான ஐந்தாயிரத்தையும் இவர்கள் முழுமையாகப் பார்த்ததில்லை. கமிசன், கழிவு, அப்படி இப்படி என சாக்குகள் சொல்லப்பட்டு அவர்களின் கட்டுத் தொகையிலும் கை வைத்து விடுவார்களாம். இது போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டி பஞ், செயலர் இருதயராஜி்டம் புகார் கொடுத்தும், பலனின்றிப் போயிருக்கிறது. பரிதாபம், அவரே ஊழல் குற்றச் சாட்டில் மாட்டிக் கொண்டு மார்க்கம் தெரியாமல் தவிக்கிற போது, இவர்களின் குறைகளை எங்கே கவனிக்கப் போகிறார் என்கிறார்கள்.

பாதுகாப்பு உறையின்றி குப்பைகளை அள்ளுகிற போது அதன் கேஸ் மற்றும் வீச்சத்தன்மையும் இருமலைக் கிளப்புகிறது. கை கால் தோல்களில் அரிப்பு உண்டாகி நோயும் பீடித்துள்ளோம். வைத்தியம் பார்க்கவும் முடியவில்லை. செத்துக் கொண்டிருக்கும் நாங்கள், அரை அங்குல இதயத்தை வைத்துக் கொண்டு அரை அடி வயிற்றை வளர்க்க அரும்பாடு படுகிறோம். நிர்வாகம் எங்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை வேதனையைக் கொட்டுகிறார் வேலம்மாள்.

மனித உரிமைகளின் எல்லை தாண்டும் அரசை, யார் தட்டிக் கேட்பது.
 
செய்தி, படங்கள்: -ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்