Published on 28/01/2022 | Edited on 28/01/2022
சிதம்பரம் அருகே பிச்சாவரம் வனசரகத்தில் கடலூர் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் 28,29 என இரு நாட்கள் நடைபெறுவதையொட்டி முதல் நாளான இன்று பறவை ஆர்வலர்கள் குழுக் கூட்டம் இன்று பிச்சாவரம் வன சரகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட வன அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பறவைகள் கணக்கெடுப்பு வழிமுறைகள் மற்றும் படிவங்கள் குறித்து பறவை ஆர்வலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிச்சாவரம் வன அலுவலர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.