Skip to main content

இறங்கி வந்த அரசு; ஆனாலும் போராட்டத்தை தொடரும் மாணவர்கள்! - என்ன நடக்கிறது சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில்?

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Government of Tamil Nadu has issued an order .. Students have announced that the struggle will continue ..!


சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைப் போலவே, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி, தொடர்ந்து 51 நாட்களாக அறவழியிலும் நூதன முறையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

 

இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுக்க மறுத்து பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. 

 

அதேவேளையில் மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து 51வது நாளான இன்று தமிழக அரசு சார்பில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மாறுவதாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 

இதனை அறிந்த மாணவர்கள், ‘இது எங்களின் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி.  இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தெளிவான விளக்கம் அந்த அரசாணையில் இல்லை. இது என்றிலிருந்து அமலாக்கப்படுகிறது என்ற தெளிவும் இல்லை. எனவே இந்த ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெளிவான விளக்கத்தை அறிவிக்கும்வரை போராட்டம் தொடரும்’ என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

 

மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளதால், பல்கலைக்கழக வளாகத்தில் குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்