Skip to main content

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பினை மேம்படுத்த நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

Government should set up panel of experts to improve infrastructure in schools - High Court


அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சம்பள விகிதம் நிர்ணயிக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலத்தையும் சேர்த்துக் கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித்தரத்தினை உயர்த்தவும் - அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார். 

 

இதையடுத்து, அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்