வானவியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி ஆராய்ச்சி பயிற்சி மாணவியாக சேர்வதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக அளவில் பலர் கலந்து கொண்டனர். அதில் 10 மாணவிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பத்து மாணவிகளில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதா ஸ்ரீ ஆகிய இரு மாணவிகளும் தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் ரஷ்யாவிற்கு சென்று விண்வெளி ஆராய்ச்சியில் பயிற்சி மாணவிகளாக பயிற்சி பெற உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் இரண்டு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி மாணவிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியை பாராட்டி ஊக்கப்படுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, அரசு பள்ளி தலைமையாசிரியை இன்பராணி ஆகியோர் மாணவிகளை பாராட்டி ஊக்கப்படுத்தி பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தில் இருந்து அரசுபள்ளி மாணவிகள் இருவர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி மாணவிகளாக செல்வது அரியலூர் மாவட்ட மக்களை பெருதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.