Skip to main content

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்!- அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்துள்ள அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்று ஒன்றில் மலைமாதா தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 55 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தை அகற்றக்கோரி, காஞ்சிபுரம் மாவட்டம், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

government land  Church chennai high court

அந்த மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மலையை வெடிவைத்து தகர்த்து படிக்கட்டுகளையும், கடைகளையும் அமைத்துள்ளதால், இயற்கையை நம்பியுள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், அவை நகருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைமாதா தேவாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வுத்துறை, மலை மாதா தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


 

சார்ந்த செய்திகள்