ஜாக்டோ&ஜியோ போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், ஓய்வு பெறும் நாளன்று (மே 31) திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஓர் அரசு ஊழியரை, அவர் ஓய்வு பெறும் நாளிலோ அல்லது அதற்கு முதல் நாளிலோ பணியிடை நீக்கம் செய்யக்கூடாது என்று தமிழக அரசே, அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனாலும், இந்த உத்தரவை அரசு பின்பற்றுவதில்லை.

இந்நிலையில் சுப்ரமணியன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை (ஜூன் 3) மாலை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாணை மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக ஓய்வு பெறும் நாளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுப்ரமணியன் மீதான நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.