திருச்சி விமான நிலையம் தற்போது தொடர் தங்கம் கடத்தும் கடத்தல் மையமாக மாறிவிட்டதோ என்கிற சந்தேகம் எல்லோரும் எழுந்துள்ளது. தொடர்ச்சியாக தினமும் யாரோ ஒரு ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிக்கொண்டெ இருக்கிறார்கள் என்பதால் எப்போதும். பரபரப்பாகவே இருக்கிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் சிவகங்கையை சேர்ந்த குத்புதீன் மற்றும் தீபா, மகாலட்சுமி, தமிழ்கொடி ஆகியோர் 35.20 லட்சம் மதிப்பிலான 1கிலோ 100 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இவர்கள் குத்புதீன் தலைமையில் குழுவாக அடிக்கடி வெளிநாடு சென்று தங்க நகைகளை கடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கடத்தல் கும்பல் தலைவன் உட்ப 3 பெண்கள் சிக்கியிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.