Published on 05/10/2021 | Edited on 05/10/2021

துபாயிலிருந்து திருச்சி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 555.00 கிராம் எடையுள்ள பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 26.29 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியின் ஆசனவாயில் மறைக்கப்பட்ட 697.500 கிராம் எடையுள்ள ரூ. 33.04 லட்சம் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. பயணிகள் இருவரும் சுங்கச் சட்டம், 1962ன் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ஐம்பத்தி ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.