கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரி, அவருடைய தாயார் சித்ரா தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை ஆக. 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பி.இ., பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் படித்து வந்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். அவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் கோகுல்ராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 23- ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார்.
விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை
நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் சேர்ந்து கோகுல்ராஜை கொலை செய்து, தண்டவாளத்தில் உடலை வீசி எறிந்தது தெரிய வந்தது.
இந்த வழக்கின் விசாரணை ஆரம்பத்தில் நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு 08.05.2019ம் தேதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கோகுல்ராஜ் தரப்பில் வழக்கறிஞர் பவானி பா.மோகனும், யுவராஜ் தரப்பில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவும் ஆஜராகி வாதாடினர்.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் 8- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளியான அருண், மற்றும் குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு, ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு அளித்தது. அதாவது மொத்தம் பத்து பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு பிணை வழங்கக் கோரியும், யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் ஏற்கனவே, இவர்களுடைய பிணை மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.