ம.தி.மு.க.வின் முப்பெரும் விழா மாநில மாநாடு இன்று ஈரோட்டில் நடந்தது. இம் மாநாட்டில் தி.மு.க. பொருளா ளர் துரைமுருகன் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்து பேசினார். .தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக இந்த மாநாட்டிற்கு நான் வந்துள்ளேன். இதில் கலைஞரின் படத்தை திறந்து வைத்ததில் நான் பெருமை படுகிறேன் .அதை போலவே எனது 50 ஆண்டுகால நண்பர் வை.கோ.வின் வாழ்வை வாழ்த்துவதிலும் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் இருவருமே கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள். நாங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கலைஞரின் சக்தி எங்களை வழிநடத்தும்.
கலைஞர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அதனால் இந்த சமூகம் அடைந்த பயன்கள் எல்லாம் தலைவர் வாழ்ந்தபோது பாராட்டதவர்கள் தற்போது பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. வேறுபட்ட கொள்கைகளை, கருத்துக்களை கொண்ட தலைவர்கள் கூட தற்போது கலைஞரின் புகழை பாடுவது அவர் ஆற்றிய பணிகளுக்கான அங்கீகாரம் ஆகும்.
நானும் வை.கோவும் ஒன்றாக சட்டக் கல்லூரியில் படித்த்தவர்கள். அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்றைக்கும் தொடர்கின்றது. எங்கள் இருவருக்கும் எப்போதுமே ஊடல்கள் இருந்தது இல்லை. அரசியலில் மாறுபட்டு பிரிந்து இருந்த போது நான் வைகோவை பற்றி வெளுத்து வாங்கி இருக்கிறேன். ஆனால் என்றைக்கும் என்னைப்பற்றி ஒரு நாளும் வைகோ தவறாக பேசியது இல்லை.. தன் உயிரை விட கலைஞரை அதிகம் நேசித்தவர் வைகோ. பாராளுமன்றத்தில் என் நண்பன் வைகோ பேசியது போல எந்த தமிழனும் பேசியது இல்லை. பாராளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தீடீரென்று எழுந்து செல்ல முயன்றார். அப்போது வைகோ ஓடாதே நில் என்று தைரியமாக கேள்வி கேட்ட ஒரே தமிழன் வைகோ ஒருவர்தான். இந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். ஆம் ஐம்பது ஆண்டுகாலம் எரிமலை மீது அவர் நடந்து வந்ததுதான் அதிகம். இனி அவர் அடுத்து வருகிற அரை நூற்றாண்டில் இனம் பார்த்து பழக வேண்டும். களம் பார்த்து கால் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரின் ஆற்றல், அறிவு, தைரியம் தற்போது தமிழகத்திற்கு தேவையாக உள்ளது. வைகோவின் தியாகம் வீண் போகாது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பார்க்க வவுனியா சென்றபோது வைகோ பத்திரமாக திரும்பி வந்துவிடுவாரா என்று கேட்டு கலைஞர் முதன் முறையாக கண் கலங்கினார். அதைதொடர்ந்து திண்டுக்கல் நடந்த மாநாட்டின் போது என்னை வைகோ இழந்தாரா அல்லது வைகோவை நான் இழந்தோனா என்று கூறி இரண்டாவது முறையாக கலைஞர் கண் கலங்கினார்.
அரசியலில் பிரிவுகள் வரலாம். ஆனால் கொள்கையில் என்றைக்கும் பிரிவு வரக்கூடாது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போதும் திராவிட இயக்க கொள்கையிலிருந்து வைகோ மாறவில்லை. அரசியலில் எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் தியாகம் செய்தவர் வை.கோ." என்ற துரைமுருகன்,
"அதேபோல் வை.கோவுக்கு மட்டும் அரசியலில் பொன்விழா அல்ல நானும் 1954 லிலேயே அரசியலுக்கு வந்தவன் தான் எனக்கும் அரசியலில் பொன் விழா தான்." என்றார்.