Skip to main content

சிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்றவர் கைது

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
சிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்றவர் கைது

புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், நேற்று காலை காவலர் மோகன்ராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். 

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவலர், புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில், சென்னை பல்லவன் சாலை காந்தி நகர் பகுதியை சேர்ந்த குரு என்பதும் சிறையில் உள்ள கைதி சகாயம் என்பவருக்கு கஞ்சா பொட்டலம் கொடுக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, குருவை கைது செய்தனர். 

சார்ந்த செய்திகள்