Published on 04/03/2025 | Edited on 04/03/2025

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தயார் தயாளு அம்மாள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக இவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று தமிழக முதல்வர் சிகிச்சை குறித்து முதல்வர் விசாரித்தார். இந்நிலையில் இன்று காலை மு.க.அழகிரி நேரில் சென்று நலம் விசாரித்த நிலையில், தற்போது மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்துள்ளார்.