ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
ஜாக்டோ ஜியோ கூட்டம் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ; செப்டம்பர் 7 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். ஏழாம் தேதியன்று வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் .எட்டாம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் நடைபெறும்.
தமிழக அரசு ஜாக்டோ ஜியோ தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 10ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ தலைவர்கள் கூடி தீவிரமான அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள் என்பனவாகும்.