தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர், மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் அனுப்பியிருப்பது தி.மு.க.வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''திமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர்களில் ஒருவர் பெண்ணாகவும், ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது விதி. இந்த ஆண்டு தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருகின்றன. அடுத்த மாதம் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை பொதுக்குழுவைக் கூட்டித் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதன்பின் சட்டதிட்ட முறைப்படி துணைப் பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்படுவர். அதில் ஒருவர் பெண்ணாகவும், ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக கண்டிப்பாக இருப்பார்கள்'' என்றார்.