Skip to main content

'ஆளுநரின் வாகனத்தின் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை...'-தமிழக காவல்துறை மறுப்பு!  

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

'No stones were thrown at the Governor's vehicle ...' - Tamil Nadu Police denies!

 

ஆளுநரின் வாகனத்தின் மீது கற்கள் வீசப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

 

'No stones were thrown at the Governor's vehicle ...' - Tamil Nadu Police denies!

 

ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பொழுது ஆளுநர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை சார்பில் அத்துறையின் கூடுதல் இயக்குநர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்பு மூன்றடுக்கு இரும்பு தடுப்புகள், பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆளுநரின் கான்வாய் கடந்து சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசி எறிந்தனர். ஆனால் அவ்வாறு வீசப்பட்டவை ஆளுநரின் வாகனம் மீது வீசப்பட்ட வில்லை. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'ஆளுநருகே நாட்டில் பாதுகாப்பில்லை. தமிழக முதல்வர் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்' என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்; 'இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் பதவி விலக வேண்டும்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்