Skip to main content

பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து; ஊழியருக்கு நேர்ந்த சோகம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Gasoline tank roof collapse accident Tragedy the employee

 

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (29.09.2023)மாலை சென்னையில் பெய்த மழையின் போது வீசிய காற்றால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூரையின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி ஏராளமான இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

 

இந்நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஊழியர் கந்தசாமி (வயது 56) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த தகவலறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார், மேலாளர் வினோத் மீது 304 ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்