விபச்சாரம் செய்ய முயன்ற கும்பல் கைது
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விபச்சாரம் செய்ய முயன்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று வாகன சோதனையின்போது பிடிபட்டது. இவர்களிடம் இருந்து பணம் ரூபாய் 10 ஆயிரமும், கார், விலை உயர்ந்த செல்போன்கள் 3, நாண்கு ஏ.டி.எம். கார்டுகள், வீரியமுட்டும் மாத்திரைகள், காண்டம், புரோக்கர் விபர நோட் ஆகியவை சிக்கியது. பாண்டிச்சேரியயை சேர்ந்த 2 புரோக்கர்கள், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த பெண் உட்பட மூவரை சிதம்பரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புரோக்கர் விபர குறிபேட்டில் அண்ணாமலை பல்கலைகழக பொறியியல் படிக்கும் வெளிநாட்டு மாணவர், கடலூர் மாவட்ட முக்கிய அரசியல் புள்ளிகள், தமிழகத்தில் உள்ள முக்கிய வணிகர்கள் பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது.
காளிதாஸ்