Published on 23/11/2019 | Edited on 23/11/2019
நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.

மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவாரும் பதவி ஏற்றதை எதிர்த்தும், மகாராஷ்டிராவின் ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்தும் சிவசேனா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளது.