Published on 11/11/2018 | Edited on 11/11/2018

அந்தமான் அருகே வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும், வரும் 15ம் தேதி முற்பகலில் வடதமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயல் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 30- 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் கடலோர மாவட்டங்களில் 14ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும், கடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கடுமையாக இருக்கும் என்பதாலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.