Published on 19/11/2018 | Edited on 19/11/2018

கஜா புயல்க பாதித்தப் பகுதியை பார்வையிடாமல் ஒத்திப்போடும் முதல்வரின் செயல் கண்டனத்திற்குறியது என்று இந்திய தேசிய லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்ஜிகே நிஜாமுதீன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, கஜா புயல்க பாதித்தப் பகுதியை நேற்று பார்வையிடுவதாக இருந்த முதல்வர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை காரணம் காட்டி ஒத்திப்போட்ட முதல்வரின் செயல் வேதனைக்குரியது. மற்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை பார்வையிட்டு , அதன் மூலம் அப்பணிகளை துரிதப்படுத்துவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் முக்கியமானதாகும். இதனை செய்யாததன் மூலம் நிவாரணப்பணிகளை இவ்வரசு சரியாக செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.