Skip to main content

“நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...” - முதல்வர் ஸ்டாலின்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தேர்தல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன். அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களான இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள். நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்..” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்