Skip to main content

காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு கடத்தல்!

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

திருவாரூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புதுச்சோி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 ஆயிரம் மதுபாட்டில்கள் வேனுடன்  பறிமுதல் செய்து  சம்மந்தப்பட்ட  இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

 

wine



திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விசுலூர் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அசூர வேகத்தில் வந்த வேனை மறித்து சோதனை செய்த போது வேனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.



காவல்துறையினர் பிடித்த வேனில் வந்தவர்கள் புதுச்சோி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டிணத்தை சோ்ந்த ரமணன்(30), காரைக்கால் நேரு நகரை சோ்ந்த சந்தான ராஜ்(34) இருவரும் என்பது தெரியவந்து, அவர்களை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றம் வேனிலிருந்த 2000
மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 

wine

 

விசாரணையில் காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த மதுபாட்டில்கள் கடத்தி செல்ல முயன்றதாக கூறியுள்ளனர்.



சமீபகாலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு தரமில்லாத மது பாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் அதிகவிலைக்கு விற்பனையாகும் சம்பவம் அதிகரித்துள்ளது. நாகை மாவட்ட  எஸ்.பியின் அதிரடியால், தினசரி நான்கு வாகனங்களுக்கு குறைவில்லாமல் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பிடிபடுகின்றன, மாற்று வழியாக தற்போது திருவாரூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், என்கிறார்கள் போலீசார்.

சார்ந்த செய்திகள்