Skip to main content

நலிவடையும் நாட்டுப்புறக்கலைகள்; காக்க அரசு முன்வரவேண்டும்;கலைஞர்கள் வலியுறுத்தல்!!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

அரசு சார்ந்த அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாரூரில் தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் திரைப்பட பிண்ணனி பாடகி சின்ன பொண்ணு தலைமையில் நடைபெற்றது. 

 

MUSIC

 

கூட்டத்தில் பேசியவர்கள் ஒவ்வொருவரும்," நாட்டுப்புற கலைகள் சமீப காலமாக அழிந்து வருகிறது.  அரசு  நாட்டுபுறகலைகளை காப்பாற்ற நலிந்த கலைஞர்களுக்கு அரசின் நலத்திட்டங்களும், அரசு சார்ந்த அனைத்து உதவிகளையும் வழங்கி ஊக்குவிக்கவேண்டும்.

 

தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் நாட்டுபுற கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் வாய்ப்பு அளித்து கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும்"  என பலரும் வலியுறுத்தி பேசினர்.

 

இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ராசி.மணிவாசகன், பொருளாளர் ஒரத்தநாடு கோபு, திரைப்பட நடிகர் ஜெயபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கலங்கி நிற்கும் குடும்பத்தினர்; பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ராமராஜன், இயக்குநர் வெற்றிமாறன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடனக் கலைஞர் காயத்ரி ரகுராம், நடிகர் சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி, விஷால்,விஜய் ஆண்டனி, நடிகர் ஆனந்தராஜ்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.