Published on 06/04/2020 | Edited on 06/04/2020
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய பரவலான பரிசோதனை முறை தேவைப்படுகிறது.இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான இரண்டு வாரக் காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியது வரவேற்கத்தக்கது.
கரோனாவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.அரசு எடுத்த நடவடிக்கையில் குறைகளை எடுத்துக்கூறினால், அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாகப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.