ஈரோட்டில் ஏற்கனவே பள்ளிச் சிறுமி கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் பெண் ஒருவரை கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்தியதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எர்ணாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரை பிரிந்து வசித்து வந்த நிலையில், அப்பெண்ணிற்கு அவரது தோழி ஐஸ்வர்யா என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். நாளடைவில் ஐஸ்வர்யாவும் அவரது கணவரும் அந்த பெண்ணை கருமுட்டை விற்பனை செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்காக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து தப்பிய அந்த பெண் அவரது கணவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை திருவொற்றியூர் காவல் துறையினர் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் ஜெனிஸ் கண்ணா ஆகிய இருவரை கைது செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.