ஈரோட்டில் ஏற்கனவே சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், நிலத்தடி நீரில் நுரை நுரையாக ரசாயனம் பொங்கி வந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சாயக்கழிவுநீர் பிரச்சனை ஈரோட்டில் பல வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், கருங்கல்பாளையத்தில் கே.ஏ.எஸ் நகரில் இருக்கக்கூடிய ஐந்தாவது வீதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுக்கான மின் மோட்டாரை ஆன் செய்த பொழுது நுரை கலந்து நீர் வெளியேறியது. தண்ணீரில் ரசாயன நெடி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சாயை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், நிலத்தடி நீர் வரை சாயக் கழிவுகள் சென்றிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.