Skip to main content

மேம்பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

Published on 24/09/2017 | Edited on 24/09/2017
மேம்பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டித்து  மேம்பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில்  இரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தடுக்க துவங்கப்பட்ட இந்தபாலம், துவங்கி சுமார் 4 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று வரை பணிகள் முடியாமல் பாதியில் நிற்கிறது. 

இதனை கண்டித்து தேமுதிக சார்யில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் , மேம்பாலம் கட்டப்படுவதால் , இந்த சாலையை பயண்படுத்தி வந்த அப்பகுதியை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள்  மாற்றும் பாதையில் சுமார் 3கிமி சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக தெரிவித்தபர். சர்வீஸ் சாலை அமைக்க  நிலம் கையபடுத்துவதில் உள்ள குளறுபடிகளை காரணமாகவே மேம்பாலம் அமைக்கும் பணி தாமபடுத்துவதாகவும் ,விரைவில் பணிகளை முடித்து தர வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதை நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் ,காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டத்து . இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்