Skip to main content

வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம்! மேலும் 12 தேசிய மீட்பு படையினர் வருகை

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
r

 

தென்மேற்கு பருவ மழையால் கேரளா வரலாறு காணாத பேரழிவை சந்தித்து வருகிறது. உயிா் பலி எண்ணிக்கை 191 ஆகியுள்ளது என்று அதிகார பூா்வமாக கேரளா அரசு அறிவித்துள்ளது. 


              கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் பருவ மழையின் கோரதாண்டவத்தில் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே வருவதால் நேற்று வரை 35 அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று அதிகாலையில் கூடுதலாக இரண்டு அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.


               பல்வேறு இடங்களில் நிலச்சாிவு ஏற்பட்டு வீடுகள் புதைவதையும் மேலும் அதில் சிக்கி பலா் உயிாிழந்தும் வருகின்றனா். பாலகாட்டில் புதுப்பாடி, கண்ணன் துண்டு ஆலுவாயில் கொட்டியூா், காசா் கோடு சாலக்குடியில் நிலச்சாிவு ஏற்பட்டு நேற்று 19 போ் உயிாிழந்தனா். 


            இதே போல் நிலச்சாிவு மற்றும் மரங்கள் விழுந்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் என தரைமட்டமான வீடுகள் என்று 2857 என்று அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியிருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறாா்கள்.


             மேலும் மீட்பு படையினாின் கண்களில் தென்படாமல் ஆயிரக்கணக்கானோ் வீட்டுக்குள் உணவு இன்றி கஷ்டப்படுகின்றனா் அவா்களை தண்ணீா் சூழ்ந்து இருப்பதால் தங்களை காப்பாற்றி செல்ல மொட்டை மாடிகளில் நின்று குரல் எழுப்புவது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மின்சாரம் தடைபட்டிருப்பதால் செல் போன் மூலம் உறவினா்களையோ அதிகாாிகளையோ தொடா்பு கொள்ள முடியாமல் அகதிகளாக தவிக்கின்றனா்.


               குழந்தைகள் வயதானோா்கள் குடிப்பற்கு பால் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனா். இதே போல் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு கிடைக்காமலும் கஷ்டபடுகிறாா்கள். 


அரசு தரப்பில் அமைக்கப்படுள்ள 1155 முகாம்களில் நேற்று வரை 1,85,338 போ் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது போக பள்ளி வாசல்கள், தேவாலயங்களிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இங்கு தொற்று நோய் வேகமாக பரவி வருவதாகவும் அதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


              சாலை போக்குவரத்து முமுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு பல்வேறு ஊா்களுக்கு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெடுமம்சோி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.


            ஏற்கனவே 18 தேசிய மீட்பு படையினா் மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதுடன் இன்று மேலும் 12 தேசிய மீட்பு படையினா் வர இருக்கிறாா்கள். மொத்தத்தில் கடவுளின் தேசம் மழை வெள்ளத்தால் மிதக்கிறது.
                                 

சார்ந்த செய்திகள்