தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஓபிஎஸ் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 8 வது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.
2019-20 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் சட்ட சபையில் வாசித்தார்.
உரையின் தொடக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி பேசிய ஓபிஎஸ்.
சமூக பாதுகாப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 3,958 கோடி,
விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு பயிர் கடன் வழங்க இலக்கு. பழங்கள்,காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க 50 கோடி.
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்,
சென்னையில் 2000 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும், முதல் கட்டமாக சென்னை, மதுரை,கோவையில், 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 லட்சம், நிரந்தர ஊனத்திற்கு காப்பீடு தொகை 1 லட்சமாக உயர்வு.மாற்று திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர் வழங்கப்படும்.
புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு 250 கோடி ஒதுக்கீடு.
காவல்துறையை நவீனமயமாக்க 111,57 கோடி ஒதுக்கீடு.பள்ளிக்கல்வி துறைக்கு 28,757 கோடி ஒதுக்கீடு.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்.
கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் 5259 கோடி ரூபாய் செலவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.
360 பஞ்சயாத்து,128 ஒன்றியங்களில் வேளாண் மேம்பாட்டிற்கு வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க 172 கோடி ஒதுக்கீடு.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது அதற்காக 1000 கோடி நிதி ஒதுக்கீடு
மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
சாதரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு 1800 ரூபாயும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 1830 ரூபாயையும் வழங்கப்படும்.
1125 கோடி ரூபாய் செலவில் தேனி, சேலம், ஈரோட்டில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் மராமத்து பணிகள் திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.
அவரக்குறிச்சி மற்றும் கே.பரமத்தி ஒன்றியங்களில் 282 கிராமங்களுக்கு 1558.87 கோடி ரூபாயில் கூட்டுகுடிநீர் திட்டம்.
கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சென்னை மாதவரம் -சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டம் விரைவில் தொடங்கும்.
சுற்றுலா தளங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்ப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சுகாதாரத்துறைக்கு 2019-20ஆம் நிதி ஆண்டில்,12,563.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
80 ஆல்க்கடல் மீன்பிடி குழுக்களுக்கு 240 நெவிக் தகவல் கருவிகள்,160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதிகளை மேம்ப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 168.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சென்னை நதிக்கரையோரம்வாழும் 38,000 ஏழை குடும்பங்களுக்கு 4647.50 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டித்தரப்படும்.
வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி,திருவொற்றியூர் குப்பத்தில் 420 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ஒட்டுமொத்தமாக 1,031.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரம்புதூர் அருகே ஒரத்தூர் அடையாற்றில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்திற்காக 55,399.75 கோடி ரூபாயும், ஓய்வூதியத்திற்கு 29,627.11 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2350 கோடி ரூபாய் செலவில் கடலாடியில் 500 மெகா வாட் சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும்
என தொடர்ந்து வாசித்து பட்ஜெட் தயாரிப்புக்கு ஆலோசனைகளை வழங்கி அதனை சமர்ப்பிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்ஜெட் உரையை முடித்தார் ஓபிஎஸ்.