Skip to main content

நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்கள் மோதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு

Published on 29/09/2024 | Edited on 29/09/2024
Fishermen on two sides clash in the middle sea; Sensation in Naga

நாகை அருகே நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகப்பட்டினத்தில் பைபர் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். சமீபத்தில் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. விசைப்படகு மீனவர்களுக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பைபர் படகு மீனவர்கள் இரண்டு விசை படகின் மீது மோதுவதை போன்ற அந்த காட்சிகள் இருந்தது. நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் படகுகளை மோத செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் நான்கு பைபர் படகுகளில் இரண்டு பைபர் படகுகள் கரை வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற இரண்டு பைபர் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த சமுதாயக் கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். எதனால் இந்த மோதல் ஏற்பட்டது என்ற விவரங்கள் மீனவர்கள் கரைக்கு வந்த பின்னரே தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்