
இந்தியா அரசு கப்பல் மோதி இறந்த மீனவா்களின் உடலை மீட்க மீனவா்கள் இரங்கல் கூட்டம் நடத்தி கண்ணீா் விட்டு அழுதனர்.
கடந்த 7-ம் குமரி மாவட்டம் ராமன்துறை மற்றும் முள்ளூர் துறையை சோ்ந்த மீனவா்கள் 12 பேர் உட்பட 15 பேர் கொச்சி முனப்பம் கடற்பகுதியில் 28 நாட்டிங்கல் தொலைவில் விசைபடகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற இந்தியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஓன்று அந்த விசைபடகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் இரண்டு பேரை தவிர மற்ற 13 பேரும் பலத்த காயங்களுடன் கடலுக்குள் மூழ்கினார்கள். இதில் 5 மீனவர்களின் உடல்களை மற்ற மீனவா்கள் அடுத்தடுத்த நாட்களில் மீட்டனர்.
மற்ற 7 மீனவா்களின் உடல்கள் என்ன ஆனது என்று இதுவரையிலும் தெரியவில்லை. மேலும் அந்த மீனவா்களின் உடல்களை கண்டுபிடிக்கவோ மோதிய கப்பல் மீது நடவடிக்கை எடுக்கவோ இந்தியா அரசும் தமிழக அரசும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. இதற்காக அந்த பகுதி மீனவா்கள் 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்கள்.
இந்தநிலையில் இன்று ராமன்துறை மீனவா்கள் இறந்த மீனவா்களுக்கு திருப்பலி நடத்தி விட்டு அங்கு ஓன்றுதிரண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஓப்பாரி வைத்து கண்ணீா் விட்டு அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.