Published on 20/11/2021 | Edited on 20/11/2021
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள செவல்பட்டி மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் ஒரு அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.
கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டின் அலறல் சத்தத்தைக் கேட்டுப் பதறிப்போன அதன் உரிமையாளர் சரவணன், துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுமாட்டைக் கயிறு கட்டி மேலே கொண்டுவந்தனர். பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.