தேனி பெரியகுளம் பகுதியில் திடீரென உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இறைச்சிக் கடைகளில் சோதனை நடத்தியதில் கெட்டுப் போன கோழி மற்றும் மீன் இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கெட்டுப் போன இறைச்சி விற்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக இறைச்சிக் கடைகளில் திடீரென உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வில் பெரியகுளத்தின் தென்கரைப் பகுதியில் உள்ள மீன் கடை மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷன் தலைமையில் நடந்த ஆய்வில் கெட்டுப் போன இறைச்சிகள் சில கடைகளில் விற்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதோடு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன இறைச்சிகளை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.