Published on 22/03/2019 | Edited on 22/03/2019
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட பாலித்தின் பைகளை, திருட்டு தனமாக விற்றுவந்த, நெய்வேலியை சேர்ந்த அம்மன் ஏஜன்சி உரிமையாளரின் லோடு வாகனத்தை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.

குறிஞ்சிப்பாடி பகுதியில், பாலித்தின் பைகளை விற்றுகொண்டு வந்த வாகனத்தை பற்றி செய்தி வந்தததை அடுத்து, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் பேரூராட்சி துணை செயல் அலுவலர்கள் நேரடியாக வாகனத்தை சோதனையிட்டு பறிமுதல் செய்தனர். அதனை அடுத்து, வாகன உரிமையாளருக்கு அபராதம் விதித்தும், இனி இதுபோல் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.