Skip to main content

மீனவர் குடும்பங்களுக்கு நிதியுதவி; அரசாணை வெளியீடு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Financial assistance to fishing families Promulgation of Ordinance

 

மீனவர் விபத்து காப்புறுதித் திட்டத்தில் மீனவ குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக இறக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசால் தேசிய மீன்வள கூட்டுறவு இணையத்தின் வழியாக மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத காலமான 01.06.2020 முதல் 18.10.2021 வரை இறந்த 205 மீனவர் மற்றும் மீனவ மகளிர் குடும்பங்களின் துயரினைப் போக்கிடும் வகையில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் அக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

 

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இறந்த 205 மீனவர் மற்றும் மீனவ மகளிர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம்  நான்கு கோடியே பத்து லட்சம் ரூபாய் மட்டும் நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்