Skip to main content

வாட்ஸ் அப் குழுவில் சண்டை; தாம்பரம் ஆணையர் எடுத்த அதிரடி முடிவு

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

bb

 

வாட்ஸ் அப் குழுவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சண்டையிட்டுக் கொண்ட நிலையில் வாட்ஸ் அப் குழுவையே நீக்கி தாம்பரம் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

அண்மையில் உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையகரத்தில் அதிகாரிகளை ஒருங்கிணைப்பதற்காகவும், நிர்வகிக்கவும் வாட்ஸ்அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இதில் காவல் ஆய்வாளர்கள், ஆணையர்கள் என  மொத்தம் 117 பேர் இருந்தனர். இந்நிலையில் அக்குழுவில் உள்ள இணை காவல் ஆணையர் மூர்த்தி துணை ஆணையர் ஜோஸ் தங்கையா என்பவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டிய மெமோவை அந்த குழுவில் பகிர்ந்துள்ளார். இதனால் குழுவில் பூகம்பம் வெடித்தது.

 

ஜோஸ் தங்கையா 'எப்பொழுதும் போலீஸ் ரூல்ஸ் பேசும் இணை ஆணையருக்கு மெமோவை குரூப்பில் அனுப்பக்கூடாது என தெரியாதா? என கேள்வி எழுப்ப, அதற்கு இணை ஆணையர் மூர்த்தி 'தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும் மன்னிக்கும் படியும்' குழுவில் கேட்டுக்கொண்டார். இருப்பினும் இதுகுறித்த வாக்குவாதங்கள் குழுவில் எழ, ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அந்த வாட்ஸ் அப் குழுவையே நீக்கிவிட்டு இனி அனைவரும் தனிப்பட்ட முறையில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்