கரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் துறை சந்திக்கவுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் மீட்டுருவாக்கம் குறித்த இலவச வெபினார் ஒன்றை, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்துகிறது.
கரோனா பரவலுக்குப் பின் தமிழக கட்டுமானத்துறையில் இருக்கும் புதிய வாய்ப்புகள், பொதுமக்களின் வாங்கும் திறன் மற்றும் ஆர்வத்தை மீட்டெடுத்தல், ரியல் எஸ்டேட் துறைக்கு கரோனா ஏற்படுத்தியுள்ள சவால்கள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்கும் வகையில், துறைசார் வல்லுநர்களின் பங்கேற்போடு இந்த வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திரா ப்ராஜெக்ட்ஸ், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 14) மாலை ஐந்து மணிக்குத் தொடங்க உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் Zoom தளத்தின் வழியாக இந்த வெபினாரில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.