கடலூரில் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரின் முக்கிய நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரி இன்றைக்கு மாசுபட்டுப்போய் உள்ளது, தினமும் மண் அள்ளுவதால் அதிக மழை பெய்தால் இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது, உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே இந்த பகுதியில் மண் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தி வேண்டும், கொண்டங்கி ஏரிக்கு அருகே புதிய பேருந்து நிலையத்தைக் கட்டுவதைக் கைவிட வேண்டும். கெடிலம், பெண்ணை ஆறுகள் ஓடுகிறது, மிகவும் மாசுபட்டுப் போய் உள்ளது. இரண்டு ஆறுகளிலும் குப்பைகள் கொட்டுவது நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவுநீரை பில்லாலி தொட்டி வழியாக கெடிலம் ஆற்றில் கலக்கும் ஏற்பாட்டை ஆலை நிறுவனத்தால் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கம்பியம்பேட்டை தடுப்பு அணை சர்க்கரை ஆலை கழிவுகளைச் சேமித்து வைக்கும் கிடங்காக மாறிப் போய் உள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதிப்படைக்கின்றனர். நிலத்தடி நீர் என்பது மாசு பட்டுப் போய், கருமை நிறமாக காட்சியளிக்கிறது. ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் ஆகாயத்தாமரை ஆறு முழுவதும் பரவி கிடக்கிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடலுர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் மருதவாணன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றுப் பேசினார்.பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டம் நோக்கங்களை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன் துவக்கி வைத்துப் பேசினார். கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி, இணை ஒருங்கிணைப்பாளர் திருமார்பன், மற்றும் குரு ராமலிங்கம், சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாசுடன் இருக்கும் நிலத்தடி நீரை பாட்டிலில் பிடித்தவாறு கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொருளாளர் வெங்கட்ராமணி நன்றி கூறினார்.