மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பழங்குடி சமூக கூட்டமைப்பின் சார்பில் இன்று (10/04/2022) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக முன்னாள் தடயவியல் துறை அதிகாரி விஜயகுமார் தலைமை வகித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழக முதல்வர் சாதிவாரி தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும், அரசியல் காரணங்களுக்காகத் தனிப்பட்ட சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஆண்டி பண்டாரத்தார் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் பிரகாசம், தமிழ்நாடு மாநில யோகீஸ்வரர் சமுதாய பேரவையின் மாநிலத் தலைவர் ராஜகோபால் வீரசைவ அமைப்பின் மாநிலத் தலைவர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.