Skip to main content

வேகமாக பரவி வரும் நீபா வைரஸ்! கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு! ராதகிருஷ்ணன் பேட்டி

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
rathakris

 

 


கேரளாவில் நீபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நீபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் காய்ச்சல் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீபா வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம்.

தொடர்ந்து கண்காணிக்கும் படி பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கேரள - தமிழக எல்லைப் பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. பன்றிகள், பழம் தின்னும் வவ்வால்களால் நீபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக எல்லைப்புறப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஊத்தி மூடப்படுகிறதா ஜெ. மரணம் பற்றிய விசாரணை ஆணையம்?

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம் நிலவியதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

 

இந்த ஆணையத்தில் வழக்கறிஞராக இருந்த நிரஞ்சன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பார்த்தசாரதி என்பவர் நியமிக்கப்பட்டார்.  தற்போது அவரும் ஆணையத்தின் வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

jaya

 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கடைசி நேர சிகிச்சைகள் எப்படி நடந்தது? யார் ஆலோசனைப்படி நடந்தது? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தவர் இவர்தான்.

 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவர், "ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஓ பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தோம்.   ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சந்தேகமும் இல்லை" என கூறியுள்ளார்.

 

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஜெயலலிதாவே கூறியதால்தான் அப்பல்லோ சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையை நானும், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவும் இணைந்து தயாரித்து வழங்கினோம் எனக் கூறியுள்ளார்.

 

jaya

 

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய  பார்த்தசாரதி விடுவிக்கப்பட்டதும், மரணத்தில் சந்தேகம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதும் ஆணையத்தின் விசாரணை தீவிரத்தை  முடக்குவதாக  தெரிகிறது என பரபரப்பு நிலவுகிறது.

 

இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்திலும்,    ஆணையத்தின் வட்டாரத்திலும் விசாரித்தபோது, எடப்பாடி அணியும் சசிகலா அணியும் இணைய போவதால் விசாரணை ஆணையத்தின் தீவிரம் குறைந்துள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நிலவுவதாக கூறியவர் ஓ பன்னீர்செல்வம். அவர் வைத்த கோரிக்கையில் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெ மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் விசாரணை ஆணையத்தின் தெரிவித்திருப்பது ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான விரிசலை பெரிதாக்கும் என கூறப்படுகிறது.