சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அதிமுகவின் வைகைச்செல்வன் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
இந்த தீர்ப்பை நல்ல தீர்ப்பாக பார்க்கிறோம். கட்சியின் தலைமைக்கு எதிராக நடந்ததால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. ஒரு கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தின் மூலமாக மக்களை சென்றடைந்தவர்கள், அந்த கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்துவது ஒரு தீய எண்ணம் என்பதை நீதிமன்றம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. அதிமுக தொண்டர்களின் உழைப்பால் கழக வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். வளர்த்துவிட்ட கட்சி சுக்கு நூறாக வேண்டும் என்று சிலர் நினைத்து செயல்பட்டதால் அவர்களுக்கு என்ன பரிசு கிடைக்க வேண்டுமோ அந்த பரிசு நீதிமன்றத்தின் மூலம் கிடைத்திருக்கின்றது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால்...
சட்டப்பேரவை தலைவர் அதிகாரம் என்பது உயர்ந்தது. இதே தீர்ப்புத்தான் உச்சநீதிமன்றத்திலும் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.