Published on 19/05/2020 | Edited on 19/05/2020

கரோனா நிவாரண நிதியாக அனைவருக்கும் 10,000 நிதி வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும், புதுச்சேரி விவசாய தொழிலாளர் நல சங்கத்தை செயல்படுத்திட வேண்டும், மஞ்சள் அட்டை உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் பருப்பு வகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் திருவண்டார்கோயில், மங்களம், சேதுராப்பட்டி, ஊசுடு உள்ளிட்ட 75 மையங்களில் விவசாய தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் கருப்புக் கொடி ஏந்தியும், கோரிக்கைகள் வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.