Published on 12/12/2021 | Edited on 12/12/2021
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் விதவிதமாக பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளின்போது அவரது ரசிகர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.