Published on 05/12/2019 | Edited on 05/12/2019

தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 50 வயது, 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால், கட்டாய ஓய்வு என வெளியான செய்தி உண்மையில்லை. அதேபோல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.