


திருச்சியில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றவாளிகளைப் பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் போலியாகச் செயல்பட்டு வரும் மசாஜ் செண்டர்களில் இந்த தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, திருச்சி நீதிமன்ற எல்லைக்குட்பட்ட ராஜா காலனி பகுதியில் இயங்கி வரும் ரோஸ் ஸ்பா, பொன்னகர் பகுதியில் இயங்கி வந்த மேஜ்ஸ் ஸ்பா, கேகே நகர் பகுதியில் உள்ள ரிலாக்ஸ் ஸ்பா, தில்லை நகர் 5 வது கிராசில் செயல்பட்டு வந்த மேக்ஸ் ஆயுர்வேதிக் சென்டர் ஆகிய இடங்களில் (மசாஜ் சென்டர் என்கிற பெயரில்) பெண்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு.
இதில், 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது விபச்சாரத் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதேபோல் பாதிக்கப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில், மசாஜ் சென்டர் என்கிற பெயரில், பாலியல் தொழில் நடைபெற்றால், அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.