இந்தியா ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 02.10 மணிக்குத் நாகர்கோவிலுக்குச் சென்றடையும். அதே சமயம் மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு இரவு11:45 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.